எழுத்தின் அளவு :

பிஎச்.டி., முடித்துவிட்டு, வேலையின்றி இருக்கும் பெண்கள், தாங்கள் சார்ந்த துறையில், மேம்பட்ட மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சியை நோக்கி செல்லும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, கொண்டுவரப்பட்டதுதான் மகளிருக்கான போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் என்ற உதவித்தொகை திட்டம்.

மகளிருக்கான பகுதிநேர ஆராய்ச்சி உதவித்தொகை என்றிருந்த பெயரை, மகளிருக்கான போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் என்று பெயர் மாற்றியுள்ளது யு.ஜி.சி.

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில், அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 55 வயதைக் கடந்தவர்களாக இருத்தல் கூடாது. இந்த உதவித்தொகை மொத்தம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. SC/ST/OBC/PH ஆகிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு.

இந்த உதவித்தொகையைப் பெற, விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி - ஆகஸ்ட் 16.

விரிவான அனைத்து விபரங்களையும் அறிய http://www.ugc.ac.in/pdfw/.

Scholarship :  மகளிருக்கான போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us