எழுத்தின் அளவு :

தத்துவத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காக, பலவிதமான உதவித்தொகை திட்டங்களை, இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தி வருகிறது.

தேசிய பெல்லோஷிப்

தத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் படைத்திருக்கும் பிரபல தத்துவ ஆய்வாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாதம் ரூ.7,300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதுதவிர வருடாந்திர செலவினங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

சீனியர் பெல்லோஷிப்

இத்திட்டத்தில் மாதம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. மேலும், வருடாந்திர செலவினமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.

ஜெனரல் பெல்லோஷிப்

இத்திட்டத்தில், மாதம் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது. மேலும், வருடாந்திர செலவினமாக ரூ.5,000 வழங்கப்படுகிறது.

ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப்

மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. அதேசமயம், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,800 வழங்கப்படுகிறது. இதுதவிர, வருடாந்திர செலவினமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.

குறுகியகால பெல்லோஷிப்

மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த காலஅளவில், செலவினங்களுக்காக ரூ.2000 வழங்கப்படுகிறது.

ரெசிடென்ஷியல் பெல்லோஷிப்

ஒரு நாளைக்கு ரூ.100 வழங்கப்படுகிறது மற்றும் அகடமிக் மையத்தால், தங்குமிட வசதி வழங்கப்பட்டோருக்கு ஒரு நாளைக்கு ரூ.75 வழங்கப்படுகிறது.

கற்றல் உபகரணம் தொடர்பான பெல்லோஷிப்

மாதம் ரூ.2,500 வழங்கப்படுகிறது மற்றும் வருடாந்திர செலவினமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான அனைத்து விபரங்களுக்கும் http://icpr.nic.in/intro.htm.

Scholarship :  இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us