பல்வேறு துறைகளில், முதுநிலைப் படிப்புகளை வெளிநாட்டில் மேற்கொள்ள, இந்திய குடிமக்களுக்கு, வட்டியில்லா கடன் உதவித்தொகைகளை, கே.சி.மகிந்திரா கல்வி அறக்கட்டளை வழங்குகிறது. இந்த திட்டத்தின்படி, ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையைப் பெற, * ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் முதல் வகுப்பு டிகிரி அல்லது அதற்கு சமமான டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். * மேலும், ஒரு புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலையில் சேர்க்கை அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்க்கைப் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலவரம்பு பிப்ரவரி 2015 காலகட்டத்திற்கு மேல் செல்ல அனுமதியில்லை உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், பட்டப் படிப்பு இறுதியாண்டு மற்றும் டிப்ளமோ இறுதியாண்டு படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.kcmet.org/what-we-do-Scholarship-Grants.aspx என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி மார்ச் 31. இறுதி நேர்முகத் தேர்வு வரும் ஜுலை மாதம் நடைபெறும். மே மாதம் இறுதியில், தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு, நேர்முகத் தேர்வு தேதி அறிவிக்கப்படும். அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.kcmet.org/what-we-do-Scholarship-Grants.aspx
Scholarship : | வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகைகள் |
Course : | |
Provider Address : | |
Description : | |