எழுத்தின் அளவு :

பல புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைகள், சர்வதேச மாணவர்களுக்காக உதவித்தொகைகள் வழங்குகின்றன என்பதை வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக் கல்வியில் உதவித்தொகை திட்டங்கள் என்பவை, பலரால் எதிர்பார்க்கப்படும் விஷயமாக உள்ளது. பல லட்சங்கள் செலவாகும் வெளிநாட்டுக் கல்வியில் ஏதேனும் வெளியிலிருந்து நிதியுதவி கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்ப்பது இயற்கையே. எனவே, சில முக்கிய வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தரும் உதவித்தொகைகள் பற்றிய விபரங்களை அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

RHODES SCHOLARSHIPS

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

இப்பல்கலையில் படிக்க விரும்பும் திறன்வாய்ந்த மாணவர்களுக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.rhodeshouse.ox.ac.uk/rhodesscholarship

GATES CAMBRIDGE SCHOLARSHIPS

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்

பிரிட்டனுக்கு வெளியிலிருந்து வந்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், ஏதேனுமொரு முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.gatescambridge.org

IMPERIAL COLLEGE INDIA FOUNDATION PhD SCHOLARSHIPS

லண்டன் இம்பீரியல் கல்லூரி

இந்தியாவிலிருந்து சென்று, அக்கல்லூரியில் பிஎச்.டி., மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இம்பீரியல் கல்லூரியின் பொறியியல் துறை அல்லது அக்கல்லூரியின் பிசினஸ் ஸ்கூல், இதை வழங்குகின்றன.

விபரங்களுக்கு: www3.imperial.ac.uk/international/prospective/newscholarships/icifscholarships

LSE INDIA SCHOLARSHIPS

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அன்ட் பொலிடிகல் சயின்ஸ்

2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த உதவித்தொகை, 50 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.lse.ac.uk/intranet/students/money-Matters/financialSupport/ScholarshipsLSE/MScApp/awards/OverseasMSc/LSE-India-Scholarships.aspx

PRINCETON UNIVERSITY FELLOWSHIPS

பிரன்ஸ்டன் பல்கலைக்கழகம்

மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் டாக்டோரல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முழு கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அடங்கிய இந்த உதவித்தொகை, சராசரியாக 68000 அமெரிக்க டாலரிலிருந்து, 72500 அமெரிக்க டாலர்கள் வரையிலானது.

விபரங்களுக்கு: www.princeton.edu/gradschool/financial/fellowships

INTERNATIONAL POSTGRADUATE RESEARCH SCHOLARSHIPS(IPRS)

முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலிய பல்கலைகளில், ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை திட்டத்தை, ஆஸ்திரேலிய அரசு வழங்குகிறது.

விபரங்களுக்கு: www.services.unimelb.edu.au/scholarships/research/international/available/iprs

Scholarship :  முக்கிய வெளிநாட்டு பல்கலைகளின் உதவித்தொகை திட்டங்கள்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us