எழுத்தின் அளவு :

வெளிநாடுகளில் பொறியியல் படிக்க விரும்புவோருக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடும், வெவ்வேறு விதமான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன. எனவே, வெளிநாட்டிற்கு சென்று பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், இவற்றைப் பற்றி அறிந்துகொண்டால், மிகுந்த நன்மையைப் பெறலாம்.

குறிப்பிட்ட நாடுகளில் வழங்கப்படும் சில வகையான உதவித்தொகை திட்டங்கள் பற்றிய விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.

HEINRICH BOLL SCHOLARSHIPS IN GERMANY FOR INTERNATIONAL STUDENTS

ஜெர்மனியிலுள்ள ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஹென்ரிக் போல் பவுண்டேஷன் என்ற அமைப்பால் இது வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், மொத்தம் 950 உதவித்தொகைகள், ஜெர்மனியை சேர்ந்தவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதில் 6ல் 5 பங்கு எண்ணிக்கையிலான உதவித்தொகைகள், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கும், 6ல் 1 பங்கு எண்ணிக்கையிலான உதவித்தொகைகள், பிஎச்.டி., படிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

மதிப்பு - முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 750 யூரோக்களும், பிஎச்.டி., மாணவர்களுக்கு மாதம் 1000 யூரோக்களும் வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.boell.de/scholarships/scholarships.html

GHENT SCHOLARSHIPS IN BELGIUM FOR DEVELOPING COUNTRIES

பெல்ஜியம் நாட்டின் கென்ட்(Ghent) பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கென்ட் பல்கலை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

உதவித்தொகைகளின் மொத்த எண்ணிக்கை 10.

மதிப்பு - மாதத்திற்கு 1000 யூரோக்கள் மற்றும் வருடாந்திர கல்விக் கட்டணம் போன்றவை இதில் அடங்கும்.

விபரங்களுக்கு: www.ugent.be/en/research/funding/devcoop/master-grants/mastergrants.htm

MONBUKAGAKUSHO SCHOLARSHIP

இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள ஏதேனுமொரு ஜப்பானிய பல்கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஜப்பானிய அரசின், கல்வி, கலாச்சார, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

மதிப்பு - மாதத்திற்கு 1 லட்சத்து 17 ஆயிரம் யென் மதிப்பைக் கொண்டது.

விபரங்களுக்கு: www.in.emb-japan.go.jp/Education/Technology_Student.html.

THE IDB SCHOLARSHIP PROGRAMME

உறுப்பினரல்லாத நாடுகளின் முஸ்லீம் சமூகத்திலிருந்து, இளநிலைப் படிப்பை மேற்கொள்ள வரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முஸ்லீம் மேம்பாட்டு வங்கி இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

மதிப்பு - கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவினங்கள்.

விபரங்களுக்கு: www.isdb.org

FACULTY FOR THE FUTURE DOCTORAL FELLOWSHIPS FOR WOMEN IN SCIENCE

வளரும் நாடுகளிலிருந்து பிஎச்.டி., அல்லது போஸ்ட் டாக்டோரல் படிப்புகளுக்கு வரும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வாங்கப்படுகிறது.

Schlumberger பவுண்டேஷன் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

மதிப்பு - சுமார் 25000 முதல் 50000 அமெரிக்க டாலர்கள் வரை.

விபரங்களுக்கு: www.facultyforthefuture.net.

Scholarship :  வெளிநாட்டு பொறியியல் படிப்புகளுக்கான உதவித்தொகை திட்டங்கள்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us