எழுத்தின் அளவு :

Print
Email

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபெடரல் வங்கியால் "ஃபெட்பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித் தொகை" வழங்கப்படுகிறது.

உதவித்தொகை: அதிகபட்சம் வருடத்திற்கு ரூ. 1,00,000

தகுதி

மருத்துவம், பொறியியல், விவசாயம், நர்சிங் மற்றும் மேலாண்மை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தை படிப்பவராக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் தலா 20 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவிகித கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

நிபந்தனைகள்

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் மாகாரஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 31 அக்டோபர் 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.federalbank.co.in என்ற இணையதளத்தைக் காணவும்.

Scholarship :  பெட்பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us