எழுத்தின் அளவு :

பிரிட்ஜ் டு இந்தியா என்பது ஒரு வியூகரீதியான சோலார் கன்சல்டிங் நிறுவனமாகும். இந்நிறுவனம், டெல்லி, ஹாம்பர்க் மற்றும் மியூனிச் ஆகிய இடங்களில் உள்ளது.

சோலார் எனர்ஜி சம்பந்தமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் பணிபுரிய விரும்பும் நபர்களுக்காக, பிரிட்ஜ் டு இந்தியா இன்டர்ன்ஷிப் ப்ரோகிராம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்டர்ன்ஷிப்பானது, பரந்தளவிலான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கி, ப்ராஜெக்ட் மேலாண்மை, டெஸ்க் மற்றும் மார்க்கெட் ஆராய்ச்சி, நெட்வொர்க்கிங், ஆர்கனைசேஷன், ரிப்போர்ட் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவற்றில் அனுபவம் பெறவும் உதவுகிறது.

மேலும், இந்த இன்டர்ன்ஷிப், பிரிட்ஜ் டு இந்தியா நிறுவனத்தின், தற்போது நடைபெற்றுவரும் ப்ராஜெக்ட்டுகள் மற்றும் எதிர்கால ப்ராஜெக்ட்டுகளிலும் மாணவர்கள் பங்குபெற வழிவகை செய்கிறது.

இடம் - டெல்லி

காலஅளவு - 6 மாதங்கள்

தகுதி - புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வணிகம் அல்லது சமூக அறிவியல் ஆகிய துறைகளில், ஏதேனுமொன்றில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Scholarship :  பிரிட்ஜ் டு இந்தியா சோலார் இன்டர்ன்ஷிப் திட்டம்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us