எழுத்தின் அளவு :

இயற்கை மற்றும் வன உயிர்கள் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவில் செயல்பட்டுவரும் பெரிய அமைப்புகளில் WWF - India ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய சுற்றுச்சூழல் சட்ட மையம், வன உயிர் பாதுகாப்புத் துறையில் ஆர்வமுள்ள சட்ட மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை வழங்குகிறது.

இந்த இன்டர்ன்ஷிப் காலத்தின்போது, மாணவர்கள், தங்களின் தினசரி நடவடிக்கைகளின் மூலமாக பெறக்கூடிய தியரி தொடர்பான புரிந்துணர்வுக்கான அகப்பார்வை, பதில்கள் மற்றும் நடவடிக்கைகளை பதிவுசெய்ய, ஒரு வாராந்திர ஜர்னலை, பராமரிக்கிறார்கள்.

இந்த இன்டர்ன்ஷிப்பில், பெரும்பாலும், சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான நடைமுறை  பணி பொறுப்புகள் அடங்கியதாக இருக்கும். இதன்மூலம், மாணவர்களுக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.

இந்த இன்டர்ன்ஷிப்பின் இறுதியில், இதில் பங்கேற்பவர், தனது அனுபவம் மற்றும் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் உள்ளிட்ட ஒரு விரிவான அறிக்கையை, 5 நிமிட விளக்கத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இடம் - டெல்லி

காலஅளவு - 1 முதல் 6 மாதங்கள்

தகுதி - சட்டத்துறையில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொண்டு வருபவர்கள்.

Scholarship :  டபிள்யூ.டபிள்யூ.எப் - இந்தியா அமைப்பின் இன்டர்ன்ஷிப்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us