சிறந்த மதிப்பெண்கள் பெறும் இந்திய பள்ளி மாணவர்களுக்கு, குளோபல் ஸ்கூல்ஸ் பவுண்டேஷன் அமைப்பு, உதவித்தொகைகளை வழங்குகிறது. குளோபல் ஸ்கூல்ஸ் பவுண்டேஷன் எனும் சிங்கப்பூர் அமைப்பு, 7 நாடுகளில், 20 வளாகங்களில், குளோபல் இந்தியன் இண்டர்நேஷனல் பள்ளிகளை நடத்துகிறது. இந்தியாவின், 10ம் வகுப்பு படிக்கும் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, முழு செலவுத் தொகையையும் உள்ளடக்கிய, ஜி.ஐ.ஐ.எஸ்.சி.வி.ராமன் உதவித்தொகை சிலவற்றை ஆண்டுதோறும் இந்த அமைப்பு வழங்குகிறது. இந்தாண்டும், அதைப் பெறுவதற்கு, தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள், மே மாதம் முதல் வாரத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுகள், மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, இந்தூர், சூரத், அகமதாபாத், புனே மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், ஜுன் மாதம் சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விபரங்களுக்கு www.giisscholarships.org என்ற வலைத்தளம் செல்க.
Scholarship : | சிறந்த மதிப்பெண்கள் பெறும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை |
Course : | |
Provider Address : | |
Description : | |