இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் சட்ட பல்கலை, சட்டம் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு 30 சதவீத கல்வி உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எல்.எல்.பி., (ஹானர்ஸ்), சட்டம், கடல்சார் சட்டம், ஐரோப்பிய சட்ட ஆய்வு, சர்வதேச சட்ட ஆய்வு போன்ற படிப்புகளுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிப்போர், மே இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்கும். பல்கலைகழகம் மற்றும் கல்லுõரி சேர்க்கை சேவை(யு.சி.ஏ.எஸ்.,) என்ற பிரிட்டிஷ் சேர்க்கை சேவையின் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக தனியே விண்ணப்பிக்க தேவையில்லை. ஒருமுறை விண்ணப்பித்தாலே போதும். தொடர்ந்து மாணவர் பயிலும் இறுதியாண்டு வரை, உதவித்தொகை வழங்கப்படும் என பல்கலையில் ஊடக ஒருங்கிணைப்பாளர் பில்சா ஹூசைன் தெரிவித்தார்.
Scholarship : | வெளிநாட்டு சட்டப்படிப்பு உதவித்தொகை அறிவிப்பு |
Course : | |
Provider Address : | |
Description : | |