எழுத்தின் அளவு :

இந்தியாவின் சிறப்பே அதன் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரம்தான். இந்தியாவின் பல்வேறு கலை வடிவங்கள் காலப் போக்கில் அழியத் துவங்கிவிட்டன. இந்த நிலையை மாற்றி, நம் நாட்டின் பண்டைய கலாச்சார வடிவங்களைப் போற்றிப் பாதுகாப்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு சி.சி.ஆர்.டி., எனப்படும் சென்டர் பார் கல்சுரல் ரிசோர்சஸ் அண்டு டிரெய்னிங் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பாக ஸ்காலர்ஷிப்புடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 520 பேர் இதன் மூலம் பயனடைய முடியும். இருந்தாலும் மொத்த ஸ்காலர்ஷிப்களில் 125 ஏற்கெனவே புராதன கலைவடிவங்களை நிகழ்த்தி வரும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

யாருக்கு ஸ்காலர்ஷிப்?

10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதியானவர்கள். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் இவர்கள் தற்போது படித்து வர வேண்டும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறைந்த பட்ச வயதில் இரண்டு வருடங்கள் வரைக் குறைக்கும் அதிகாரம் இந்த அமைப்பிற்கு உள்ளது.

இந்தக் குழந்தைகள் படித்துவரும் பள்ளியிலிருந்து ஒரு சான்றிதழை கொடுக்க வேண்டியிருக்கும். இதே போல் இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற விரும்பும் குழந்தைகளின் வீட்டு வருமானம் மாதம் ரூ.6 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். தனி நபரின் திறமையைப் பொறுத்து இதற்கும் விதி விலக்கு உள்ளது.

மற்ற தகவல்கள்

முதலில் இரண்டு ஆண்டு காலத்திற்கான ஸ்காலர்ஷிப்பாகத் துவங்குவது ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நீட்டிக்கப்படும். ஒரு குழந்தையின் 20 ஆவது வயது வரையிலோ அல்லது பட்டப் படிப்பை முடிக்கும் வரையிலோ இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

இந்த ஸ்காலர்ஷிப்புக்காக வரும் விண்ணப்பங்களை தகுதி அடிப்படையில் சி.சி.ஆர்.டி., அமைப்பு பரிசீலித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எந்தப் பள்ளியில் பள்ளிப்பாடம் மற்றும் கலாசாரம் சார்பான பயிற்சிக்கு வாய்ப்புகள் உள்ளதோ, அங்கு பயிற்சி வழங்கப்படும்.

முழுமையான தகவல்களை அறிய பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும். இந்த ஸ்காலர்ஷிப்புக்கு தகுதி உடைய குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை விண்ணப்பிக்கும் துறைக்கு ஏற்றபடி விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றுகளுடனான விண்ணப்பங்களை சி.சி.ஆர்.டி, புது டில்லிக்கு அனுப்ப வேண்டும்.

இணையதள முகவரி www.ccrtindia.gov.in/App_Frm/english%20form.pdf

Scholarship :  கலாச்சாரத் திறனுக்கு உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us