எழுத்தின் அளவு :

மேற்கு ஆஸ்திரியாவின் டைரல் மாநிலத்தின் தலைநகரம் இன்ஸ்பிரக் ஆகும். யூனிவர்சிடி ஆப் இன்ஸ்ப்ரக் சர்வதேச அளவில் அறியப்படும் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக்கழகமாகும்.

இந்தப் பல்கலைக் கழகம் அனைத்து தேசத்திற்கும் பொதுவான எராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிப்களை தி ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ் எராஸ்மஸ் முண்டஸ் மாஸ்டர்ஸ் கோர்ஸ் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்

இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற விரும்புபவர்கள் இயற்பியல், அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோபிஸிக்ஸ் அல்லது கணிதப் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐரோப்பிய கிரெடிட் டிரான்ஸ்பர் முறையின் அடிப்படையில் குறைந்த பட்சம் 180 கிரெடிட் புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியறிவை நிரூபிக்கும் வகையில் ஒரு படிப்பு தேவைப்படும். மூன்றாம் உலக நாடுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கான பிரத்யேகத் தேவைகள் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பிலான பின்வரும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே ஸ்காலர்ஷிப்பை அகடமிக்ஸ் பிரிவிலும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான பிரத்யேகத் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்கு பி.எச்.டி., அளவிலான படிப்பும், பயிற்றுவிக்கும் அனுபவமும் தேவைப்படும்.

மற்ற தகவல்கள்

எராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

முகவரி
University of Innsbruck,
Institute of Astro  and Particle
Physics,
Technikerstrasse 25,
A6020 Innsbruck.
www.astromundus.eu

Scholarship :  ஆஸ்திரிய நாட்டு உதவித் தொகை அறிவிப்பு
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us