எழுத்தின் அளவு :

டெல்லி: கலைஞர்கள் மற்றும் கலை-வரலாற்றாளர்களுக்கு, டெல்லி லலித்கலா அகடமி, உதவித்தொகை வழங்குகிறது.

டெல்லி லலித்கலா அகடமியானது, கடந்த 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட 3 அகடமிகளில் இதுவே இளையது. இந்த அகடமி, 2012-13க்கான உதவித்தொகையை வழங்குகிறது.

உதவித்தொகையின் நோக்கம்

விசுவல் ஆர்ட்ஸ் துறையில் ஈடுபட்டிருக்கும் இளம் மற்றும் வளரும் கலைஞர்கள், தங்களது புத்தாக்கத் திறன்களை மேம்படுத்திக்  கொள்ளவும், அவர்களுக்கான பணியிடத்தை அளிக்கவும், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை - மாதாமாதம் ரூ.10,000

காலஅளவு - 12 மாதங்கள்

தகுதி - 35 வயதுக்குள்(1 ஜனவரி, 2012 தேதிப்படி) இருக்கும் கலைஞர்கள், கலை விமர்சகர்கள் மற்றும் கலை வரலாற்றாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

அகடமியின் இணையதளம் http://lalitkala.gov.in சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் நடைமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, லக்னோ மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களிலுள்ள லலித்கலா அகடமிகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - 31 மார்ச், 2012

விலாசம்

Lalit Kala Akademi
Rabindra Bhavan
35, Ferozshah Road,
New Delhi-110001

Scholarship :  லலித்கலா அகடமி வழங்கும் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us