எழுத்தின் அளவு :

Print
Email

முதுநிலைப் படிப்பில் அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் பாடங்களிலும், இளநிலைப் படிப்பில் பொறியியல் அறிவியல்கள், மருத்துவ அறிவியல்கள், பார்மசூடிகல் அறிவியல்கள், வேளாண் அறிவியல்கள் மற்றும் கால்நடை அறிவியல்கள் போன்ற பாடங்களை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் படித்து, முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பிஎச்.டி ஆய்வை மேற்கொள்வதற்கென, மொத்தம் 5 வருடத்திற்கான INSPIRE FELLOWSHIP மற்றும் பொருத்தமான ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படுகின்றன.

INSPIRE உதவித்தொகை

ஆராய்ச்சித் துறைகள்

பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் பார்மசி உள்ளிட்ட அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியலில் முனைவர் பட்டம்.

உதவித்தொகை காலம்

அதிகபட்சம் 5 வருடங்கள். அதேசமயம், முனைவர் பட்ட ஆராய்ச்சி முன்பே முடிந்துவிட்டால், உதவித்தொகை நிறுத்தப்படும்.

தகுதிகள்

* முதுநிலைப் படிப்பில் அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் பாடங்களிலும், இளநிலைப் படிப்பில் பொறியியல் அறிவியல்கள், மருத்துவ அறிவியல்கள், பார்மசூடிகல் அறிவியல்கள், வேளாண் அறிவியல்கள் மற்றும் கால்நடை அறிவியல்கள் போன்ற பாடங்களில் முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்கள்.

* பொறியியல் அறிவியல்கள் மற்றும் இதர தொழில்முறை பாடங்களில், இளநிலைப் படிப்பில் முதல்நிலை மதிப்பெண் பெற்றவர்கள்.

* கூட்டு CSIR - UGC National Eligibility Test for Fellowship தேர்வு அல்லது GATE போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

குறிப்பு

Senior Research Fellowship அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற முடியாது.

மாணவர் தேர்வு

மெரிட் அடிப்படையில் மாணவர் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பித்தல்

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய http://www.inspire-dst.gov.in/INSPIRE_Fellowship_Advertisement.pdf என்ற இணையதளம் செல்க.

இதுதொடர்பாக, பிற விபரங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள www.inspire-dst.gov.in - website என்ற இணையதளம் செல்க.

Scholarship :  அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பிஎச்.டி. ஆய்வுக்கான உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us