எழுத்தின் அளவு :

பெங்களுருவில் உள்ள ஜவகர்லால் நேரு செண்டர் பார் அட்வாண்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச் கல்வி நிறுவனம், லைப் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கெமிக்கல் சயின்ஸ், இன்ஜினியரிங் சயின்ஸ் மற்றும் அட்மாஸ்பிரிக் சயின்ஸ் போன்ற பாடப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 80 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி அத்துடன் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தற்போது இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளோர் விண்ணப்ப படிவத்தை கல்லூரி இணையதளத்தில் டவுண்லோடு செய்து, அத்துடன் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விவரங்களுக்கு www.jncasr.ac.in/srfp.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Scholarship :  அறிவியல் படிப்புகளில் உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us