எழுத்தின் அளவு :

சுவீடன் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறை தொடர்பான உயர்கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு(Guest scholarship program for PhD and post-doctoral studies in sweeden) உதவித்தொகை வழங்கப்படுகிறது. மொத்தம் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். முனைவர் பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக இந்திய மதிப்பில் 85 ஆயிரத்து 554 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 7000 ரூபாய் வழங்கப்படும். பயணப்படியாக 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நோய், விபத்துக் காப்பீடு போன்றவையும் உண்டு.

ஆறு, 12, 18 மாதங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்கள், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நாளில் இருந்து அவர் சுவீடனில் வசிப்பவராக இருக்கக் கூடாது. சுவீடன் நிரந்தரமாகத் தங்குவதற்கான உரிமை, பணி செய்வதற்கான உரிமை பெற்றிருக்கக் கூடாது. ஐரோப்பிய யூனியன் குடிமகனாக இருத்தல் கூடாது. வரும் ஜனவரி இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.studyinsweeden.se/scholarships/SI-scholarships/Guest-scholarship-program என்ற இணைய முகவரியைப் பார்க்கலாம்.

Scholarship :  ஸ்வீடனில் படிக்க உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us