எழுத்தின் அளவு :

ஹாங்காங் ஆய்வு மானியக்குழுவால் கடந்த 2009ல் இத்திட்டம் துவக்கப்பட்டது. ஐந்து பள்ளிகளில் 31 பாடப்பிரிவுகளில் முழு நேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்காக இவ்வுதவித் தொகை வழங்கப்படுகிறது.

அறிவியல், பொறியியல், வணிக மேலாண்மை, மனிதவியல் மற்றும் சமூகஅறிவியல், சூழலியல் அறிவியல், உயிரிப் பொறியியல், கடல்சார் சூழலியல் அறிவியல் என்ற ஐந்து துறைசார்ந்த பள்ளிகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாதாந்திர ஊக்கத்தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; பயணப்படி 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 135 பேர். அரசு நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு  www.ust.hk/hkpfs/index.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Scholarship :  ஹாங்காங் முனைவர் பட்ட உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us