எழுத்தின் அளவு :

வெளிநாட்டில் இருந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைதான் கிளாரெண்டன் பன்ட் ஆகும்.

சுமார் 10 ஆண்டுகாலமாக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பட்டப்படிப்பு பயிலும் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது கல்விக் கட்டணம், இதரச் செலவுகளும் சேர்த்து 30 ஆயிரம் யுரோப்கள் வழங்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து வரும் சிறந்த மாணவர்கள், பொருளாதார நெருக்கடியால் படிக்க இயலாமல் போகக் கூடாது என்ற அடிப்படை நோக்கத்தோடு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகை குறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள www.clarendon.ox.ac.uk இணையதளத்தைப் பார்க்கவும்.

Scholarship :  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவித்தொகை
Course :  பட்டப்படிப்பு
Provider Address :  The Clarendon Fund Scholarships
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us