எழுத்தின் அளவு :

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேதியியல், நிலவியல் துறைகளில் உதவித்தொகையுடன் ஆய்வு மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேராசிரியர் சைதாலி முகோபத்யாய் வழிகாட்டுதலின் கீழ் Influence of Ganglioside on the structure and Dynamic of membrane- Bound peptides / Proteins என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்ய சி.எஸ்.ஐ.ஆர்., சார்பில் ஆய்வு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

வேதியியலில் முதுநிலைப்பட்டத்தை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். பிசிக்கல் கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நெட் அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

செப்டம்பர் மாதம் முதல் தேதி அன்று அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்; பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது வரம்புச் சலுகை உண்டு. உதவித்தொகையாக சி.எஸ்.ஐ.ஆர்., விதிகளின் படி தகுதியைப் பொருத்து 16 ஆயிரம் ரூபாய் அல்லது 12 ஆயிரம் ரூபாய், இதர சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவியல்(Geology) துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:

பேராசிரியர் சான்டனு போஸ் வழிகாட்டுதலின் கீழ், Interpretation of multiple deformations in the Eastern Himalaya: A kinematic correlation with orogenic movements என்ற தலைப்பில் ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். ஆய்வுக்கால அவகாசமாக இரண்டு ஆண்டுகள் எட்டு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி பாடப்பிரிவில் முதுநிலையில் முதல்வகுப்பில் தேர்ச்சியுடன், நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அமைப்பில் ஆய்வுகளில் (structural reseach) ஈடுபட்ட அனுபவம் இருக்க வேண்டும்.

உதவித்தொகையாக மாதம் 16 ஆயிரம் ரூபாய்; 30 சதவீத வீட்டுவாடகைப்படி மற்றும் இதரபடிகள் வழங்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.caluniv.ac.in  என்ற இணைப்பைச் சொடுக்கவும்.

Scholarship :  கொல்கத்தா பல்கலையில் ஆய்வு உதவித்தொகை
Course :  வேதியியல், நிலவியல்
Provider Address :  Kolkatta University www.caluniv.ac.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us