எழுத்தின் அளவு :

சிறுபான்மையின மாணவிகளுக்கான மத்திய அரசின் மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெற மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு தலா 12,000 ரூபாய் உதவித் தொகையாக இரண்டு தவணைகளில் அளிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை www.maef.nic.in  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலர், மெளலானா ஆசாத் தேசிய கல்வி அறக்கட்டளை, செய்ம்ஸ் போர்டு சாலை, புதுடெல்லி-110055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Scholarship :  சிறுபான்மையின மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us