எழுத்தின் அளவு :

பீடி, சுரங்கப் பணி மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகைப் பெற மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் அருகில் உள்ள பீடி தொழிலாளர் நல மருந்தகங்களிலும், மாவட்ட துணை நல ஆணையாளர் அலுவலகத்திலும் கிடைக்கும்.

அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்கள், இநத விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தங்களது கல்வி நிலையம் மூலம் அனுப்ப வேண்டும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பீடி தொழிலாளர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுரங்கம் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

துணை நல ஆணையர், மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் நல அமைப்பு, 8/2ஏ, செயின்ட் தாமஸ் சாலை, ஹை கிரவுண்ட், திருநெல்வேலி - 627011

பிற அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

தலைமை மருத்துவ அதிகாரி, பீடித் தொழிலாளர் நலம் மருந்தகம், 58/35, முகமது அலி முதல் தெரு, பேர்ணாம்பட்டு, குடியாத்தம் வட்டம், வேலூர் மாவட்டம் - 635810. 

Scholarship :  பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us