எழுத்தின் அளவு :

Print
Email

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

பொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2600 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

இதில் 2000 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000மும், 300 பொறியியல் மாணவர்களுக்கும், 200 மருத்துவ மாணவர்களுக்கும் (4 ஆண்டுகளுக்கு), 100 எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு www.iocl.com இணையதளத்தை காணவும்.

Scholarship :  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us