எழுத்தின் அளவு :

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

இளநிலை படிப்பு
கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தற்போது யு.சி.ஜி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க, வீட்டில் ஒரே ஒரு குழந்தை அதுவும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும் இந்த மாணவி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பப்படிவங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். “APPLICATION FOR MERIT SCHOLARSHIP FOR FOR UNDER GRADUATE STUDIES 2010 (F என்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக் கவரில் எழுதி கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முதுகலை படிப்பு
தேசிய அளவில் சி.பி.எஸ்.இ., நடத்திய ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முதுகலை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்
ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

விண்ணப்பித்த தகுதி வாய்ந்த முதல் 350 மாணவர்கள் மட்டும் இந்த ஸ்காலர்ஷிப்புக்கு தேர்ந்தெடுக் கப்படுவர். விண்ணப்பங்களை பெறுவதற்கும், மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளவும் www.cbse.nic.in இணையதளத்தை பார்க்கவும். கடைசி தேதி 2010, டிச. 31ம் தேதி.

முகவரி
Section Officer (Scholarship),
CBSE, Shiksha Kendra,
2 Community Centre,
Preet Vihar, Delhi – 110 092.

Scholarship :  சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப்!
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us