எழுத்தின் அளவு :

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தற்போது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதன் படி பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க, வீட்டில் ஒரே ஒரு குழந்தை அதுவும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும் இந்த மாணவி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்.

விண்ணப்பப்படிவங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி
Section Officer (Scholarship),
CBSE, Shiksha Kendra,
2 Community Centre,
Preet Vihar, Delhi – 110 092.

Scholarship :  பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us