எழுத்தின் அளவு :

இந்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நிபுணர்களை சந்திக்கவும், தேவைப்படும் கல்வி உதவித்தொகையை வழங்க இன்லேக்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த உதவித்தொகையின் மூலம் மூன்று மாதங்கள் ஆராய்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும். இதற்கான விமான பயணக்கட்டணம், தங்கும் வசதி, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என அனைத்துக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த கல்வி உதவித் தொகையை பெற இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியவை:

* இன்லேக்ஸ் டிராவல் கிராண்ட்டில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை முழுவதும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை www.inlaksfoundation.org என்ற இணையதள முகவரியில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

* மாணவர்கள் தாங்கள் ஆராய்ச்சி சம்பந்தமான கட்டுரை மாதிரியை (3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வார்த்தைகளுக்குள்) இணைத்து அனுப்ப வேண்டும். இந்த கட்டுரை நன்கு வடிவமைக்கப்பட்டதாகவும், தங்களது ஆராய்ச்சி முழுவதையும் விளக்குவதாகவும், ஆய்வின் களப்பணி மற்றும் வேறு ஏதாவது பணி செய்திருந்தால் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

இந்த கல்வி உதவித் தொகையின் மற்ற விபரங்களை அறியவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.inlaksfoundation.org என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Inlaks Shivdasani Foundation,
86/87 Atlanda,
Nariman Point,
Mumbai - 400 0211

Scholarship :  ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us