எழுத்தின் அளவு :

பத்தாம் வகுப்பு முடித்துள்ள எஸ்.டி., மாணவர்களுக்கு மெயின்டனன்ஸ் அலவன்ஸ், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவருக்கான வசதிகள், கட்டாய கல்விக் கட்டணங்கள், கல்விச் சுற்றுலாவுக்கான கட்டணங்கள், அறிக்கைகளை பிரிண்ட் செய்வதற்கான கட்டணங்கள், தொலை தூரக் கல்வி முறையில் பயிலுபவர்களுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை பெறலாம்.
 
எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து இதைப் பெற முடியும்.
 
உயர்கல்வி
 
2007-08ம் ஆண்டிலிருந்து இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் எஸ்.டி., மாணவர்களுக்கு இந்தியாவின் தலை சிறந்த 127 கல்வி நிறுவனங்களில் நிர்வாகவியல், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் படிக்க மத்திய அரசு உதவுகிறது.
 
இவர்களின் கல்விக் கட்டணம், கல்வி நிறுவனங்கள் திருப்பித் தராத டெபாசிட் போன்றவற்றை இதன் மூலமாக மாணவர்கள் பெற முடியும். அரசு மற்றும் அரசின் நிதி பெறும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். இதில் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை பெறலாம்.
 
இது தவிர தங்குமிடத்துக்கான கட்டணம், புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வாங்குவதற்கான செலவு, புதிதாக கம்ப்யூட்டர் வாங்கும் செலவு போன்றவற்றுக்கும் உதவித் தொகை தரப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் 23 கல்வி நிறுவனங்களில் பயிலும் 79 மாணவர்கள் இந்த சலுகையைப் பெற்றனர்.
 
வெளிநாட்டு படிப்புகளுக்கான உதவித் தொகை
 
வெளிநாடுகளில் சென்று பட்ட மேற்படிப்புகளையோ ஆய்வுப் படிப்புகளையோ படிக்கும் எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகைகள் தரப்படுகின்றன. கல்விக் கட்டணம், மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம், விசா கட்டணம், மெயின்டனன்ஸ் கட்டணம், அவசர கால தேவைகளுக்கான பணம் போன்றவற்றை இதிலிருந்து பெற முடியும். 2007-08ல் 2 எஸ்.டி. மாணவர்கள் இதைப் பெற்றனர்.
 
ராஜிவ் காந்தி நினைவு தேசிய உதவி தொகை
 
எம்.பில். மற்றும் பி.எச்டி. பயிலும் மாணவர்களுக்கு இதன் கீழ் யூ.ஜி.சி. கட்டணத்துக்கு இணையான உதவித் தொகைகள் தரப்படுகின்றன. 2007-08ம் கல்வியாண்டில் இதன் கீழ் 667 எஸ்.டி. மாணவர்கள் பயனடைந்தனர்.

Scholarship :  எஸ்.டி., மாணவர்களுக்கான மத்திய அரசு உதவித்தொகைகள்
Course : 
Provider Address :  www.socialjustice.nic.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us