எழுத்தின் அளவு :

தகுதி அளவு

வயது
இளம் விஞ்ஞானிகள் 45 வயதிற்கு உட்பட்டவர்கள்.
மூத்த விஞ்ஞானிகள் 55 வயதிற்கு உட்பட்டவர்கள்.
 
கல்வித் தகுதி: எம்.டி., எந்தத் துறையிலாவது பி.எச்டி.,

அனுபவம்

இளம் விஞ்ஞானிகள்:  தேவையான கல்வித் தகுதியை பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது மூன்று ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய / ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம்.
 
மூத்த விஞ்ஞானிகள்: குறைந்தது 15 ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய / ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம்.

இதர தகுதிகள்

  • விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பயோ மெடிக்கல்/ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரந்தர அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.
  • இளம் விஞ்ஞானிகளாக இருந்தால், ரூ.5,00,000/- உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடிந்து திரும்பிய பின்னர் தாய் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

உதவித்தொகை விபரங்கள்

உதவித்தொகை எண்ணிக்கை
இளம் விஞ்ஞானிகள் 6
மூத்த விஞ்ஞானிகள் 3
 
கால அளவு
இளம் விஞ்ஞானிகள் மூன்று முதல் ஆறு மாதங்கள்
மூத்த விஞ்ஞானிகள் 10 முதல் 15 நாட்கள்.
 
வழங்கப்படும் தொகை: ஏற்கனவே வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து சம்பளம் மற்றும் இதர அலவன்சுகளுடன்.
 
இளம் விஞ்ஞானிகள்: மாதம் ஒன்று 1800 அமெரிக்க டாலர்.
 
மூத்த விஞ்ஞானிகள்: தங்குமிட வசதியுடன், நாள் ஒன்றுக்கு 150 டாலர்.
 
உதிரிச் செலவுகள் மான்யம்: இளம் விஞ்ஞானிகள் ரூ.10,000/-
 
பயண மான்யம்: இந்தியன் ஏர்லைனஸ்/ ஏர் இந்தியா விமானத்தில் எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம்.
 
விண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக அனுப்ப வேண்டும். ஆராய்ச்சி மேற்கொள்ளும் காலத்தில், மேற்படி விண்ணப்பதாரர் நிறுவனத்தின் முழுநேர ஊழியராகவே கருதப்படுவார் என்ற அறிக்கையையும் சேர்த்து அனுப்ப வேண்டும். ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள அனுமதித்துள்ள நிறுவனம் மற்றும் பயிற்சி திட்டம் போன்ற விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
 
தேர்வு நடைமுறைகள்: விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் பயோ மருத்துவ ஆராய்ச்சி துறையில் தேவைப்படும் பயிற்சி அடிப்படையில் உதவித் தொகைக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
அறிவிப்பு வெளியிடப்படும் தேதி மற்றும் காலக்கெடு: ஜூன் /ஜூலை மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். கடைசி தேதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Scholarship :  ஐசிஎம்ஆர் சர்வதேச உதவித்தொகை
Course : 
Provider Address :  Indian Council of Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi - 110029 www.icmr.nic.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us