தகுதி அளவு
வயது: 50 வயதிற்கு கீழ்
கல்வித் தகுதி
-
பொறியியல் / தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம்
-
மருத்துவத்தில் எம்.டி., பட்டம்
-
அறிவியலில் பி.எச்டி., பட்டம்.
இதர தகுதிகள்
-
அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் அல்லது தொழில் நுட்ப நிறுவனத்தில் / பல்கலைக்கழகத்தில் விண்ணப்பதாரர் நிரந்தர ஊழியராக / விஞ்ஞானியாக/ தொழில்நுட்ப நிபுணராக பணியாற்ற வேண்டும்.
-
ஆராய்ச்சி பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
-
ஸ்பான்சர் பெற்றிருக்க வேண்டும்.
பெல்லோஷிப் விபரங்கள்
கால அளவு: ஒன்று முதல் மூன்று மாதங்கள்
வழங்கப்படும் தொகை: மாதம் ரூ.3000/-
சில்லரை செலவு மான்யம்:மாதம் ரூ.500/-
பயண மான்யம்: ரயிலில் முதல் வகுப்பு கட்டணம்
அவசியமான மேல் செலவுகள்: ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதித்த நிறுவனத்திற்கு ரூ.1000 /- வழங்கப்படும்.
விண்ணப்ப நடைமுறைகள்: ஸ்பான்சர் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வரையறுக்கப்பட்ட விண்ணப்பத்தை, வெள்ளை பேப்பரில் டைப் செய்து (10 நகல்கள்), அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு வெளியிடப்படும் தேதி மற்றும் காலக்கெடு:
நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை