தகுதி
வயது : 24 முதல் 27 வரை
வயது வரம்பு தளர்வு
எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பில் ஐந்தாண்டு தளர்வு
கல்வித் தகுதி
ஜேஆர்எப் (JRF)க்கு
எம்.எஸ்சி., பி.பார்ம்., பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி., (விவசாயம்),/எம்.பி.பி.எஸ்.,/பி.இ.,/பி.டெக்., முதல் வகுப்பில் தேர்ச்சி.
(SRF)க்கு
எம்.பில்., எம்.பார்ம்., எம்.எஸ்சி., எம்.எஸ்சி., (விவசாயம்), எம்.டி., எம்.இ., எம்.டெக்., முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டும்.
தகுதித் தேர்வு
யுஜிசி-சிஎஸ்ஐஆர்/கேட் தேர்வு
விண்ணப்பிக்கும் முறைகள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பெற்றக் கொள்ளலாம். மேற்கொள்ளப்பட உள்ள ஆராய்ச்சி குறித்த மேற்பார்வையாளரால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான முன்மொழிவுகள், ஆய்வு நடத்த அனுமதித்துள்ள நிறுவனம் போன்ற விபரங்களை விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறைகள்
விண்ணப்பங்களை பரிசீலித்து அதில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட நபர்கள், மும்பையில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதித் தேர்வானது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோருக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
அறிவிக்கப்படும் தேதி மற்றும் கடைசி நாள்
ஜூலை /ஆகஸ்ட் மாதங்களில் அறிவிக்கப்படும். அறிவிப்பில் கடைசி தேதி குறிப்பிடப்படும்.
இந்த கல்வி உதவித் தொகையை வழங்கும் நிறுவனம்
அணுசக்தி துறை