எழுத்தின் அளவு :

வயது: 35 வயது

கல்வித் தகுதி

 • விண்ணப்பிக்கும் நபர்கள், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 • கப்பல் கட்டுமானம்.
 • சம்பந்தப்பட்ட பாடத்தில் / அது சார்ந்த பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜப்பான் மொழி

 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மொழியில் முதுகலை பட்டம் பெறுவதற்கான படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஜப்பான் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பல்கலை மற்றும் பிளஸ் 2 மட்டத்தில், ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலை / இந்திய கல்வி நிறுவனத்தில் ஜப்பான் மொழியில் மூன்று ஆண்டு படிப்பு படித்திருக்க வேண்டும்.

இதர பாடப்பிரிவுகள்

 • தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு ஆராய்ச்சி பயிற்சி / ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 • வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்ற பின்னர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • ஜப்பான் மொழி மற்றும் இலக்கியம் மற்றும் ஜப்பான் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
 • ஜப்பானின் புவியியல், கலாசாரம் மற்றும் பாரம்பர்யம் பற்றிய போதுமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
 • வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் இந்தியாவில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகை விபரம்
வழங்கப்படும் கல்வி உதவித் தொகை எண்ணிக்கை
32 முதல் 35 வரை
 
கால அளவு
18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை
 
விண்ணப்ப நடைமுறைகள்
வெள்ளை பேப்பரில் வரையறுக்கப்பட்ட படிவத்தில், விண்ணப்பத்தை டைப் செய்து, சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படங்கள், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி திட்டம் மற்றும் இதர ஆவணங்களை இணைத்து நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். பணிபுரிவோர் தங்களின் நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 
அறிவிப்பு வெளியிடப்படும் தேதி மற்றும் காலக்கெடு
ஏப்ரல் /மே மாதங்களில் வெளியிடப்படும். அறிவிப்பில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

Scholarship :  ஜப்பான் அரசின் கல்வி உதவித் தொகை
Course :  மேலாண்மை மற்றும் நிதி (அட்வான்ஸ் பயிற்சி)
Provider Address :  DIRECTOR (Scholrships), Ministry of human resource development, Department of Secondary and higher education, External scholarships division(Es-3), A2/ W4, curzon road barracks, KG Marg, New delhi - 110001. Tel: 011 - 23386401 Fax: 011 - 23385337 www.education.nic.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us