எழுத்தின் அளவு :

வயது: 20 முதல் 35 வயது வரை
 
வயது வரம்பில் தளர்வு
எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு உயர்ந்த பட்ச வயது வரம்பில் 1-2 ஆண்டுகள் தளர்வு
 
கல்வித் தகுதி
இளங்கலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (கிரேடு சிஸ்டமாக இருந்தால், அதை மாற்றுவதற்கான பார்முலா கொடுக்கப்பட வேண்டும்).

1. சுற்றுலாவில் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பு

2. முதுகலை பட்டப்படிப்பில் சம்பந்தப்பட்ட பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

3. எம்.எஸ்சி., பட்டம் பெற்றிருப்பதுடன் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்

1. பட்டப்படிப்பு முடித்த பின்னர் சுற்றுலா துறையில் ஒரு ஆண்டு தொழில் ரீதியான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்ற பின், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிய அனுபவம் அல்லது ஆராய்ச்சி மேற்கொண்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், அது ஒரு ஆண்டு அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

3. முதுகலை பட்டம் பெற்ற பின், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்

1. ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆஸ்திரியா பற்றிய போதுமான விபரங்களை அறிந்திருக்க வேண்டும்.

2. தேசிய கல்வி உதவித் தொகை தொடர்பான படிப்பிற்காகவோ அல்லது பயிற்சிக்காக வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.

3. ஜெர்மன் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் எந்தப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றாரோ அதே பிரிவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

5. விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரங்கள்

கால அளவு: ஒன்பது மாதங்கள்

மதிப்பு

1. உணவு, குளிர்பானங்கள், தங்கும் வசதி, சுற்றுலா, உடல் நலக் காப்பீடு, இறுதித் தேர்வுக்கான கட்டணம் உட்பட பதிவு, மருத்துவ ஆய்வு மற்றும் பயிற்சி கட்டணம் என அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும்.

2. மாதம் ஒன்று ரூ.6,800 அலவன்ஸ் வழங்கப்படும். ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் (செமஸ்டர்) ரூ.1000/- புத்தகங்கள் வாங்குவதற்கான அலவன்ஸ்சாக வழங்கப்படும்.

இதர அலவன்சுகள்

  • முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6800 (உத்தேசமாக ரூ.9060)
  • உதவி பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.8000 (உத்தேசமாக ரூ.10,600) (மாறுதலுக்கு உட்பட்டது)
  • உடல் நலக் காப்பீடு, பல்கலை கட்டணம், புத்தகங்கள் மற்றும் தங்கும் இடம் போன்றவற்றுக்கும் அலவன்சுகள் வழங்கப்படும்.
  • படிப்பை முடித்து திரும்பும்போது செலவாகும் பயண கட்டணத்தை விண்ணப்பதாரரோ, நிறுவனத்தினரோ அல்லது ஸ்பான்சர்களோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பங்களை வரையறுக்கப்பட்ட படிவங்களில் தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும். பணிபுரிவோர் உரிய நிர்வாகத்தினர் மூலமாக அனுப்ப வேண்டும்.
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு: பிப்ரவரி /ஏப்ரலில் அறிவிக்கப்படும்.

Scholarship :  ஆஸ்திரிய அரசின் கல்வி உதவித் தொகை
Course :  மொழிகள் மற்றும் மொழியியல் சிறப்பு பயிற்சி
Provider Address :  DIRECTOR (scholarships), Ministry of Human Resource development, External scholarships division (ES-3), A2/W4, Curzon road Barracks, KG Marg, New delhi - 110001 Tel: 011-2338 6401 Fax: 011-2338 5337 http://www.education.nic.in/scho.asp, http://www.education.nic.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us