எழுத்தின் அளவு :

வயது: 33 வயது
 
வயது வரம்பு தளர்வு: எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு 2 ஆண்டு வயதில் தளர்வு
 
கல்வித் தகுதி
  • முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டாக்டர் படிப்புகள்
  • முதுகலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள்.
  • முதுகலை டாக்டர் படிப்பு
  • சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
அனுபவம்: வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை முடித்த பின்னர், இரண்டு ஆண்டு தொடர்ச்சியா ஆசிரியராக பணியாற்றிய /ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம் இருக்க வேண்டும். எம்.பிஎல்., பி.எச்டி., படித்திருந்தால், அது ஒரு ஆண்டு அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
 
இதர தகுதிகள்: அரபு நாடுகளைப் பற்றிய போதுமான அறிவை விண்ணப்பதாரர் கொண்டிருக்க வேண்டும். வெளிநாடு திரும்பிய பின் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்.

கல்வி உதவித் தொகை விபரங்கள்

கால அளவு: முதுகலை பட்டம் - மூன்று ஆண்டுகள்
 
மதிப்பு: புத்தக அலவன்சுகள், பிரிபரேஷன் அலவன்ஸ், உள்நாட்டு பயண கட்டணங்கள், மருத்துவச் செலவுகள்,பயிற்சி, தேர்வு கட்டணங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் விதிகளின் படி இதர கட்டணங்கள் உட்பட மாதாந்திர அலவன்சுகள் அனைத்தும் உண்டு.

பயண கட்டணம்: விண்ணப்பதாரரோ/ நிறுவனமோ/ ஸ்பான்சர் செய்பவரோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகள்: டைப் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக ( பணிபுரிபவராக இருந்தால்), சான்றிதழ்களின் நகல்களுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு
ஏப்ரல் / மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.
அறிவிப்புகளில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

Scholarship :  எகிப்து அரசின் கல்வி உதவித் தொகை
Course :  மொழிகள் மற்றும் மொழியியல் (முதுகலை டாக்டர் பட்டம்)
Provider Address :  DIRECTOR (scholarships), Ministry of Human Resource development, Department of secondary and H igher Education, External scholarships division (ES-3), A2/W4, Curzon road Barracks, KG Marg, New delhi - 110001 Tel: 011-2338 6401 Fax: 011-2338 5337 http://www.education.nic.in/scho.asp
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us