வயது
இளம் விஞ்ஞானிகள் 45 வயதிற்கு கீழ்
மூத்த விஞ்ஞானிகள் 55 வயதிற்கு கீழ்.
கல்வித் தகுதி: எந்தத் துறையிலும் எம்.டி., மற்றும் பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள்.
அனுபவம்
இளம் விஞ்ஞானிகள் : தேவையான கல்வித் தகுதியை பெற்ற பின்னர், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்த பட்சம் மூன்றாண்டு ஆசிரியராக பணியாற்றிய / ஆராய்ச்சி மேற்கொண்ட அனுபவம்.
மூத்த விஞ்ஞானகள்: குறைந்தது 15 ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய /ஆராய்ச்சி மேற்கொண்ட அனுபவம்.
இதர தகுதிகள்
கல்வி உதவித் தொகை விபரங்கள்
எண்ணிக்கை
இளம் விஞ்ஞானிகள் 6
மூத்த விஞ்ஞானிகள் -3.
கால அளவு
இளம் விஞ்ஞானிகள் 3 - 6 மாதங்கள்
மூத்த விஞ்ஞானிகள் 10 முதல் 15 நாட்கள்.
மதிப்பு: சம்பளம் மற்றும் இதர சலுகைகளை ஏற்கனவே பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இளம் விஞ்ஞானிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 1800 அமெரிக்க டாலர் வழங்கப்படும். மூத்த விஞ்ஞானிகளுக்கு தங்கும் வசதி உட்பட நாள் ஒன்றுக்கு 150 அமெரிக்க டாலர் வழங்கப்படும். அதிகபட்சமாக 1800 டாலர் வழங்கப்படும்.
சில்லரை செலவு மான்யம்: இளம் விஞ்ஞானிகளுக்கு ரூ.10,000/-
பயண செலவு : ஏர் இந்தியா/ இந்தியனர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம்.
விண்ணப்ப விதிமுறைகள்: விண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்பங்களை தாங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் இந்த உதவித் தொகை பெறும் காலத்தில் தங்களின் முழு நேர ஊழியராகவே கருதப்படுவார் என தெரிவிக்கும் நிறுவனத்தின் கடிதம் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதித்துள்ள நிறுவனத்தின் கடிதம் மற்றும் பயிற்சி திட்ட விபரங்கள் போன்றவைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு விதிமுறைகள்: விண்ணப்பிப்பவர்களின் தகுதி அடிப்படையில், பயோ மருத்துவ ஆராய்ச்சி துறையில் தேவைப்படும் பயிற்சி போன்றவற்றின் அடிப்படையில், உதவித் தொகை வழங்குவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு: ஜூன்/ஜூலை மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்