எழுத்தின் அளவு :

அறிவியல்

* 10ம் வகுப்பு பொது தேர்வில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்று இருப்பவர்கள் அல்லது நிகரான மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து இருக்கும் மாணவர்கள், அந்த ஆண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் பங்கேற்று இருக்க வேண்டும்

* 12ம் வகுப்பு பொது தேர்வில் அறிவியல் பாடங்களில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருப்பவர்கள் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் பங்கேற்று இளம் கலை வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து இருப்பவர்கள்.

* அந்த ஆண்டில் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று இருப்பவர்கள், தாமாகவே தகுதி பெற்றவர்களாவார்கள்.

பொறியியல்

* பி.இ/பி.டெக் படிப்பில் இரண்டாம் ஆண்டை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முடித்து இருக்கும் மாணவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதியில் முதல் இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள்.

மருத்துவம்

* எம்.பி.பி.எஸ்.,/ பி.வி.எஸ்சி.,/ பி.டி.எஸ்., படிப்புகளில் 2ம் ஆண்டு படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முடித்து இருப்பவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதியில் முதல் இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர்கள்.

வழங்கப்படும் பெல்லோஷிப் எண்ணிக்கை

அறிவியல்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர் வரை
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 60 பேர் வரை
 
பொறியியல்
25 பேர் வரை
 
மருத்துவம்
25 பேர் வரை

உதவித் தொகை வழங்கப்படும் காலம்

அறிவியல்
10ம் வகுப்பு/ இணையான படிப்பு முதல் எம்.எஸ்சி., படிப்பு வரை
 
பொறியியல்
பி.இ.,/பி.டெக் படிப்பில் மூன்றாம் ஆண்டு முதல் எம்.இ.,/ எம்.டெக் படிப்பு வரை
 
மருத்துவம்
எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/ பி.டி.எஸ்., மூன்றாம் ஆண்டு முதல் படிப்பு முடியும் வரை

கே.வி.வி.ஒய்., பெல்லோஷிப் பெறுபவர்கள் பெறும் கூடுதல் சலுகைகள் பற்றி அறிய www.dst.gov.in என்ற இணைய தளத்தை பாருங்கள்.

தேர்ந்தெடுக்கும் நடைமுறை
அறிவியல் பாடம் தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள், தகுதி திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள், அவர்கள் ஆராய்ச்சி கட்டுரையை எந்த அளவுக்கு சமர்பித்துள்ளனர் மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

Scholarship :  இந்திய தேசிய அறிவியல் அகாடமி
Course :  மருத்துவ மற்றும் துணை மருத்துவ அறிவியல்( எம்.பி.பி.எஸ்.,)
Provider Address :  The Executive Secretary, Indian National science Academy, Bahadur shah zafar marg, New Delhi-110 002 Tel.No: 011- 2322 1931-50(20 lines) Fax: 011-2323 5648/1095 www.dst.gov.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us