எழுத்தின் அளவு :

பாடப் பிரிவுகள்:

உயிரி தொழில்நுட்பம்/ மரபணு இன்ஜினியரிங் தொழில்நுட்பம், தொழில்துறை சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் தொழில்நுட்பம், நேனோ தொழில்நுட்பம், பெட்ரோ - கெமிக்கல் இன்ஜினியரிங் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், கிரையோஜெனிக் இன்ஜினியரிங் தொழில்நுட்பம், மெக்காட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், லேசர் தொழில்நுட்பம், குறை வெப்ப தெர்மல் டைனமிக்ஸ், ஆப்டோமெட்ரி ஆர்ட் ரெஸ்டொரேஷன் தொழில்நுட்பம், கடற்கரை தளம் மற்றும் துறைமுக தொழில்நுட்பம், இமேஜ் சிஸ்டம் தொழில்நுட்பம், சூரிய சக்திக்கான, பரவலாக்கப்பட்ட மற்றும் மின் பகிர்மான இன்ஜினியரிங் தொழில்நுட்பம், எரிசக்தி சேமிப்பு, எரிசக்தியின் தேர்ந்த பயன்பாட்டு இன்ஜினியரிங் தொழில்நுட்பம், கலவைப் பொருட்கள், ஒருங்கிணைப்பு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம், அணுசக்தி இன்ஜினியரிங் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சாப்ட்வேர் தர நிர்ணயம், நெட்ஒர்க்கிங்/ இணைப்பு இன்ஜினியரிங் தொழில்நுட்பம், பேரழிவு மற்றும் பேரழிவுக்குப் பின்னால் உள்ள காலங்களுக்கான தகவல் தொடர்புக்கான முறை, மல்டிமீடியா தகவல் தொடர்புகள், தொழில்நுறை பாதுகாப்பு இன்ஜினியரிங்.

அடிப்படைத் தகுதிகள்:

வயது: 35 வயதுக்குட்பட்டவர்கள்.

கல்வி:

முதுகலை

* சம்பந்தப்பட்ட படிப்பில், இளங்கலையில், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 2 ஆண்டு அனுபவமும் வேண்டும்.

டாக்டரேட்

* சம்பந்தப்பட்ட படிப்பில், முதுகலையில், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். இதே துறையில் ஆசிரியராகப் பணியாற்றுதல்/ ஆராய்ச்சி/ தொழில் ரீதியான பணிகளில் 2 ஆண்டு அனுபவம் அல்லது இதே துறையில் எம்.பில்., முடித்திருக்க வேண்டும்.

டாக்டரேட் பட்டத்திற்கு மேல் படிக்க விரும்புபவர்கள்

சம்பந்தப்பட்ட படிப்பில், முதுகலையில், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பி.எச்.டி., மற்றும் 5 ஆண்டுகள் ஆசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ, தொழில்ரீதியான பணியாற்றிய அனுபவமோ இருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் விவரங்கள்:

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை: 20.

காலம்: ஒன்று முதல் 3 ஆண்டுகள்.

மதிப்பு:
டாக்டரேட் வாங்கிய பின் படிக்க, பி.எச்.டி., மற்றும் முதுகலை படிக்க: ஆண்டுக்கு, 8,200 அமெரிக்க டாலர்கள்.
யு.கே.,வில், ஆண்டுக்கு 5,200 பவுண்டு ஸ்டெர்லிங்.

இதர நிதி உதவிகள்: ஆண்டுக்கு 550 அமெரிக்க டாலர்கள்.

மற்ற உதவிகள்: கருவிகளுக்கான படிகள், படிப்பு ரீதியான பயணங்களுக்கான செலவு, மருத்துவ இன்சூரன்ஸ் போன்றவை.

பயண நிதி உதவி: தேசியமயமாக்கப்பட்ட விமானத்தில், மிகக் குறைந்த வழித்தடத்தில், சாதா கட்டணத்தில், வெளிநாடு சென்று வருவதற்கான கட்டணம் கொடுக்கப்படும்.

Scholarship :  தேசிய வெளிநாட்டு உதவித்தொகை
Course : 
Provider Address :  Ministry of Social Justice and Empowerment, SCDV, Division Shastri Bhavan, New Delhi - 110 001 www.socialjustice.nic.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us