எழுத்தின் அளவு :

Print
Email

தகுதி:

வயது: 33 வயதிற்கு குறைவானவர்களுக்கு; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இரண்டு ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

* பி.இ., (சிவில்/எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல்) பிரிவில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் பயிற்சி முடித்த பிறகு சொந்தப்பணிக்கு திரும்ப மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், பீரோ ஆப் பப்ளிக் எண்டர்பிரைசஸ், எப்.ஐ.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய இந்திய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதர தகுதிகள்:

* இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்

* இளம் தொழில்துறை பொறியாளராக இருக்க வேண்டும்

* சிவில்/எலக்ட்ரிகல்/மெக்கானிக்கல் நிறுவனங்களில் குறிப்பாக இங்கிலாந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களில் பணிபுரிபவராக வேண்டும்

* இரண்டு ஆண்டு தொழில்துறை அனுபவம் இருக்க வேண்டும்

* நிறுவனத்திற்காக மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்

எண்ணிக்கை: நான்கு

காலம்: 4-12 மாதங்கள்

வழிச்செலவு: இங்கிலாந்து செல்லும் செலவை உதவித்தொகை பெறுபவர் ஏற்க வேண்டும். ஆறு மாதத்திற்கு குறைவான பயிற்சி பெறுபவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவை இங்கிலாந்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பு(சி.பி.ஐ.,) ஏற்கும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய படிவத்தில் போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பணியில் இருப்பவர்கள் உரிய வழிமுறைகளின் படி விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும். உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

Scholarship :  இங்கிலாந்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address :  Director (Scholarships) Ministry of Human Resource Development Department of Secondary and Higher Education External Scholarships Division (ES-4) A2/W4 Curzon Road Barracks KG Marg New Delhi-110001 www.education.nic.in
Description :   
Search this Site

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us