எழுத்தின் அளவு :

தகுதி:

வயது: விண்ணப்பிக்கும் ஆண்டில் ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி, 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.

தளர்வு: எஸ்சி/எஸ்டி மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டு தளர்வு

இதர தகுதிகள்: பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றில், டாக்டர் படிப்பிற்கான ஆய்விற்காக முதலாண்டில் விண்ணப்பதாரர் சேர்ந்திருக்க வேண்டும்.

கால அளவு: மூன்று ஆண்டு + ஒரு ஆண்டு நீட்டிப்பு

விண்ணப்பதாரர், எந்த நிறுவனத்தில் டாக்டர் பட்டப்படிப்பு ஆய்வுக்காக பதிவு செய்துள்ளாரோ, அந்த நிறுவனத்தின் மூலமாக வருடாந்திர அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டு முடிந்த பின், அடுத்த ஆண்டுக்கான உதவித் தொகை பெற, முன்னேற்ற அறிக்கை மற்றும் பயன்பாட்டு சான்றிதழை, ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனத்தில் இருந்து பெற்று ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்ப வேண்டும்.

கண்காணிப்பு:
விண்ணப்பதாரின் முன்னேற்ற அறிக்கை, ஏ.ஐ.சி.டி.இ.,யின் நிபுணர் குழுவால், பரிசீலிக்கப்படும். முன்னேற்ற அறிக்கை திருப்திகரமாக இல்லை எனில் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் 3+1 ஆண்டுக்குள், பி.எச்டி., படிப்பை முடிக்க விண்ணப்பதாரர் தவறினால், எந்த விதமான காரணமும் கூறாமல் உதவித் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
 
தேர்வு நடைமுறைகள்:
விண்ணப்பங்களின் அடிப்படையில், சிலர் தேர்வு செய்யப்பட்டு அந்த நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அனேகமாக செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.
 
அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்.  

Scholarship :  ஏ.ஐ.சி.டி.இ. - நேஷனல் டாக்டரல் பெல்லோஷிப்
Course :  பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - பி.எச்டி.,
Provider Address :  ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION, Indira Gandhi Sports Complex, I.P. Estate, New Delhi-110 002, Telephone Numbers: 011-23392506 /63/ 64/ 65/ 68/ 71/ 73/ 74/ 78, Fax: 0112339255, www.aicte.ernet.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us