ஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும். ஜூலை 17,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

விஜய் மல்லையாவின் எல்லைகள் விரிந்து கொண்டே போகின்றன என்றால் மிகையில்லை என்றே கூறலாம் போல... புதிய துறைகளில் இந்த கர்நாடகா மாநில தொழிலதிபர் காலடி வைத்த வண்ணம் இருக்கிறார். கிங்பிஷர் பியர், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என பரந்து விரியும் இவரது சாம்ராஜ்யத்தின் மற்றொரு விரிவாக்கம் தான் கிங்பிஷர் டிரெய்னிங் அகாடமி. இது முதலில் மும்பையிலுள்ள அந்தேரியில் துவங்கப்பட்டது இந்த ஏவியேஷன் சிறப்புப் பயிற்சி நிறுவனம். முதலில் மும்பையில் துவங்கப்பட்டாலும் தற்போது 10 நகரங்களில் இது செயல்பட்டு வருகிறது. கேபின் க்ரூ எனப்படும் பணி தொடர்பான சிறப்புப் பயிற்சியை இந்த நிறுவனம் தந்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் முக்கியப் படிப்புகள் 2 உள்ளன. ஏவியேஷன் மேனேஜ்மென்ட் பிரிவில் 6 மாதப் படிப்பு தரப்படுகிறது. ஏவியேஷன் மற்றும் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் பிரிவில் ஒரு ஆண்டு படிப்பும் தரப்படுகிறது. ஏவியேஷன் துறையின் மிக உயரிய திறன் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுவதாக இதன் நிர்வாகம் கூறுகிறது. வர்ச்சுவல் யுனிவர்சிடி என்னும் இதன் அதி நவீன சாப்ட்வேரானது பயிற்சி வகுப்புகள், நடைமுறை அனுபவம் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து புதிய மேம்பட்ட பயிற்சி அனுபவத்தை மாணவர்களுக்குத் தருகிறது.

டில்லி, சண்டிகார், புனே, இந்தூர், நாக்பூர், கோல்கட்டா, ஜெய்ப்பூர், கவுகாத்தி, டெகராடூன் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்தப் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

முழு விபரங்களறிய பார்க்க வேண்டிய இணைய முகவரி: http://www.kingfisheracademy.com

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us