பி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

பி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்?ஜூலை 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இப் படிப்பை முடிப்பவருக்கு பொதுவாக இத் துறையில் இன்டீரியர் டெகரட்டர், தியேட்டர் செட் டிசைனர், எக்சிபிஷன் டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. என்றாலும் வெறும் படிப்பு இருப்பதால் மட்டுமே வேலை கிடைக்காது அல்லவா? எனவே நீங்கள் இந்தத் துறையில் சிறப்பாக உருவாக பின்வரும் தன்மைகளையும் தகுதிகளையும் பெற்றிருப்பது கூடுதல் பலன் தரும்

மாறிக் கொண்டே வரும் சமூக பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருத்தல், ஓவியத் துறையில் ஆர்வம் இருத்தல், கற்பனை வளம் பெற்றிருத்தல்,
படமாக வரைவதை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருத்தல்.வெறும் தகுதிகளை விட அது சார்ந்த கூடுதல் திறன்கள் தான் நமக்கு சிறப்பான வாய்ப்புகளை அளிக்கின்றன என்பதை எப்போதும்
நினைவில் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us