நெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

நெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.ஜூலை 08,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

முற்றிலும் டெக்னிகல் துறை இது. இன்றைய நவீன உலகில் அதிகம் தேவைப்படும் கனெக்டிவிடிக்கு மிகவும் நெருங்கிய உ றவைக் கொண்டது நெட்வொர்க்கிங். எனவே இதில் மிகுந்த திறனைக் கொண்டவர் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்கும்
ஒருவர் தனக்குக் கீழ் செயல்படும் சில டெக்னீசியன்களைக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக இதில் செயல்படலாம்.

நெட்வொர்க்கிங் அட்மின்: லேன், வான், வி.பி.என். ஆகிய நெட்வொர்க்குகளை நிர்வகிப்பதை இது குறிக்கிறது. தொலைதூரத்திலிருந்தபடியே நமது நிறுவனத்தின் நெட்வொர்க்குகளை நிர்வகிப்பது இன்று சாதாரணமாக நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. விண்டோஸ் என்.டி., நாவல், யுனிக்ஸ், லினக்ஸ் போன்றவற்றின் நுணுக்கங்களை நன்றாக அறிந்திருப்போருக்கு இது எளிதான செயலாக மாறிவிடுகிறது.

நெட்வொர்க் டெக்னீசியன்/சர்விஸ் டெக்னீசியன் ஆகியோர் ஹார்ட்வேர்/சாப்ட்வேர் பிரச்னைகளை களைவது மற்றும் சப்போர்ட் பணிகளை முறையே செய்கிறார்கள். இது போலவே நெட்வொர்க் புராகிராமர், அனலிஸ்ட், நெட்வொர்க் மேனேஜர், நெட்வொர்க் செக்யூரிடி போன்ற பணிகளையும் இத் துறையினர் மேற்கொள்கிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us