நானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும். | Kalvimalar - News

நானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும். ஜூன் 30,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய காலகட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் என்பது பல துறைகளிலும் செயல்படுவது போலவே பல ஊர்களிலும் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு சுய உதவிக் குழுக்களாகச் செயல்பட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி சிறப்பான வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். இந்தக் குழுக்களிலிருந்து ஆண்டு தோறும் வேலைக்குச் செல்பவர்களை மேலோட்டமாகப் பார்த்தால் வேலையில்லா திண்டாட்டம் என்பதே இல்லையோ என்னும் அளவிற்கு சந்தேகம் தோன்றும். இது போல, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் உங்களுடைய குழுவிற்கு வாழ்த்துக்கள். 

கடற்படையில் நிரந்தர பணிவாய்ப்புகள்
கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ.,மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.  கேடட் என்ட்ரி (பிளஸ் 2யு.பி.எஸ்.சி., நடத்தும் நேவல் அகாடமி தேர்வு மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கிராஜுவேட் ஸ்பெஷல் என்ட்ரி (நேவல் அகாடமி, கோவா). சி.டி.எஸ்.ஏ., தேர்வு மூலமாக சேர்க்கை. 19 முதல் 22 வயதுள்ள பி.எஸ்சி., (இயற்பியல், கணிதம் படித்த) அல்லது பி.ஈ., முடித்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி நேவல் அகாடமி, கோவா. 19 முதல் 24 வயதுள்ள ஆண்கள் மட்டும். பி.எஸ்சி., இயற்பியல், கணிதம் படித்த அல்லது பி.ஈ., முடித்திருக்கும் என்.சி.சி., சி சான்றிதழ் பெற்றவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். டைரக்ட் என்ட்ரி நேவல் ஆமமென்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் பணிகள். பி.ஈ., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் முடித்த அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் இவற்றில் ஓன்றில் பட்ட மேற்படிப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம். 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். டைரக்ட் என்ட்ரி லா கேடர் 22 முதல் 27 வயதுள்ள ஆண்கள் சட்டத்தில் பட்டப்படிப்பு 55 சதவீதத்துடன் முடித்திருக்கவேண்டும். லாஜிஸ்டிக்ஸ் கேடர் குறுகிய கால பணிகளுக்கு 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ.,பொருளாதாரம் அல்லது பி.காம்., அல்லது பி.எஸ்சி., இயற்பியல் கணிதம் அல்லது பி.ஈ., பி.டெக்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் தகுதி.  ஏ.டி.சி., குறுகிய காலப் பணி களுக்கு 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல் ஆல்லது கணிதம் அல்லது இவற்றில் எம்.எஸ்சி.,யில் குறைந்தது 55 சதவீதத்துடன் தேர்ச்சி.  இதைத் தவிர கல்விப் பிரிவில் எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்போருக்கும் எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படித்திருப்போருக்கும் பணிகள் உள்ளன.

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் பி.ஈ., தகுதி பெற்றவருக்கும் பணியிடங்கள் உள்ளன. உங்களது தகுதிக்கேற்ப பணியிடங் களை தேர்வு செய்து அதன் போட்டித் தேர்வுக்காக தயாராக வேண்டும். மேலும் ராணுவப் பணிகளுக்கு உடற்திறன் அவசியம் என்பதால் நமது ராணுவப் பிரிவுகளின் இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட்டு பிற விபரங்களை அறியவும். எப்போதும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் அட்சய பாத்திரங்கள் நமது ராணுவப் பிரிவுகள் தான் என்பதை மனதில் ஏப்போதும் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us