வெளிநாடுகளில் உள்ள பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆகியவற்றுக்கு உள்ள வாடிக்கையாளர்கள் தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் நேரில் இந்த அலுவலகங்களுக்குச் சென்று தங்களது சேவைகளைப் பெறுவதை விட ஒரு போனிலோ அல்லது எஸ்.எம்.எஸ்., மூலமாகவோ சேவை பெறுவது சுலபமாக உள்ளதால் தகவல்களையும் சேவைகளையும் போன், இன்டர்நெட் போன்றவற்றின் மூலமாகப் பெற விரும்புகின்றனர். இது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்.
இது போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இந்த மேலை நாடுகளில் உள்ளதால் இந்தச் சேவையை இன்டர்நெட்டிலும் போனிலும் தர விரும்பும் நிறுவனங்கள் இந்தச் சேவைகளில் தங்களது ஊழியர்களை பயிற்சி பெறச் செய்து பணியில் அமர்த்துகின்றனர். இது போன்ற பணிகளை செய்து தருவோருக்கு இந்த நாடுகளில் தரப்படும் சம்பளம் அதிகமாக உள்ளதால் ஆங்கிலமும் குறிப்பிட்ட துறை பற்றிய விபரங்களும் நல்ல கம்ப்யூட்டர் திறனும் உள்ள இந்தியா போன்ற தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்த கால் சென்டர்களை திறந்து இந்தச் சேவையை இது போன்ற நிறுவனங்கள் தந்து வருகின்றன.
சமீபத்திய உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு முடிந்த மந்தமான சூழலுக்குப் பின்னும் இந்திய ஐ.டி.இ.எஸ்., துறை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. எனவே இத்துறை சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.