விரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன? | Kalvimalar - News

விரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன? ஜூன் 16,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நல்ல வேலை கிடைக்கும் வரை தனியார் துறையில் கிடைக்கும் சுமாரான வேலைகளில் ஒன்றில் சேர்ந்தால் நல்ல வேலைக்காக உழைக்க முடியுமா என்பது பலரது மனதில் உள்ள கேள்வி. படிப்பு முடித்து சில மாதங்களோ ஆண்டுகளோ வீட்டில் இருந்தால் எந்த கட்டாயமும் இல்லாமலே ஒரு வேலையில் சேர்ந்தால் தான் நமக்கு நல்லது என்ற நினைப்பில் சில இளைஞர்கள் உயிரை எடுக்கும் வேலைகளில் போய் சேர்ந்து மாட்டிக் கொள்கிறார்கள்.

குறைவான சம்பளத்தில் முடிந்த மட்டுக்கும் நன்Ùக வேலையை வாங்கி விட வேண்டும் என்பதே எந்த நிர்வாகிக்குமான தன்மை. பட்டப்படிப்பு முடித்த பின் 2000க்கும் 2500க்குமான சம்பளத்தில் பணியில் சேர்ந்து விட்டு, பின் எந்த போட்டித் தேர்வுக்கும் தயார் செய்ய முடியாமல் அல்லது மேற்கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர் நிறையப் பேர் உள்ளனர்.

8 மணி நேரத்திற்குக் குறைவாக தற்போது வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலுமே யாரும் வெளியே வர முடிவதில்லை. எங்கும் கம்ப்யூட்டர் என்றான பின், வேலை குறைவதற்குப் பதிலாக கூடிக் கொண்டே தான் போகிறது. காரணம் புதிதாக இவற்றில் பணியிடங்களே உருவாவதில்லை. மேலும் ஏற்கனவே காலியான இடங்களும் நிரப்பப்படுவதில்லை.

எனவே தனியார் துறை என்று மட்டுமல்லாமல் பொதுத் துறை நிறுவனங்களிலும் அரசுத் துறையிலுமே தற்போது கடுமையான பணித் தேவை இருக்கிறது. இது இந்த கால கட்டத்தின் கட்டாயம். எனவே பணியில் சேர்ந்த பின் கொஞ்சம் அனுமதி வாங்கிக் கொண்டு இதைப் படிக்கலாம் அதில் சேரலாம் என எண்ணக் கூடாது. மாறாக, உங்களது நேரத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் திறனைப் பெற நீங்கள் முயற்சிக்க வேண்டும்.

உங்களது தகுதிக்கும் அடிப்படைத் திறனுக்குமான பணி வாய்ப்புகள் என்னென்ன, இதற்கு எப்படி தயாராக வேண்டும், என்னென்ன படிக்க வேண்டும், எப்போது படிக்க முடியும், கூடுதலாக எதில் பயிற்சி தேவை, யாருடன் சேர்ந்து இவற்றில் திறன் பெற முடியும் போன்ற எண்ணற்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களாகவே எழுப்பிக் கொண்டு, ஒவ்வொன்றுக்குமான அணுகுமுறையை நண்பரோடு அல்லது உங்களுக்கு உதவக் கூடியவரோடு விவாதித்து முடிவு செய்து கொண்டு அதற்கேற்ப உங்களது முயற்சியை தொடங்குங்கள்.

இவற்றில் சுணக்கம் ஏற்பட்டால் எந்த நிறுவனத்தில் பணி புரிய தற்போது எரிச்சல் வருகிறதோ அதிலேயே கடைசி வரைக்கும் கால் காசுக்கும் அரை காசுக்கும் வாழ்நாள் முழுவதும் பணி புரிய வேண்டி வரலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவை எதுவுமே முடியாத போது அதே நிறுவனத்தில் மேலே மேலே செல்ல என்னென்ன தகுதிகளும் திறன்களும் தேவை என்பதை அறிந்து அவற்றைப் பெற முயலுங்கள். வாய்ப்புகள் எங்கும் உள்ளன. எது நமது எதிர்காலத்திற்கு உதவும் என்பதே உங்களுக்கான கேள்வியாக இருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us