ஆண்டு சம்பளம் ரூ.7 லட்சம் - படிக்கலாமா பங்கு வர்த்தகம்? | Kalvimalar - News

ஆண்டு சம்பளம் ரூ.7 லட்சம் - படிக்கலாமா பங்கு வர்த்தகம்?

எழுத்தின் அளவு :

பரிதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பினான்ஷியல் மேனேஜ்மென்ட் (என்.ஐ.எப்.எம்.,) கல்வி நிறுவனம், மும்பை பங்குச் சந்தையுடன் இணைந்து "எக்சிகியூட்டிவ் புரோக்கிராம் இன் கேபிடல் மார்க்கெட்" என்ற படிப்பை வழங்குகிறது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச், ரெகுலேட்டரி பாடீஸ், மார்க்கெட் இன்டர்மீடியரீஸ், வங்கி, மியூச்சுவல் பண்ட், கம்பெனிகளில் சொத்து மேலாண்மை பொறுப்பு போன்றவற்றில் பணியாற்றக்கூடிய திறன் வாய்ந்த வல்லுனர்களை உருவாக்கும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மார்க்கெட்டிங் நிபுணர்களுக்கு ஏற்றவாறு, இப்படிப்பை வடிவமைத்துள்ளனர். நிதிச்சந்தையின் அனைத்து பிரிவுகள் பற்றியும், குறிப்பாக பணப்பங்கு, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், கமாடிட்டீஸ், பாரின் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படுகிறது. இப்படிப்பை நிறைவு செய்தவர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை பன்மடங்காக பெருக்கும் வல்லமை பெற்றவர்களாக மட்டுமின்றி, சர்வதேச சட்டம் அறிந்தவர்களாகவும் இருப்பர். சட்டப் பூர்வமாகவும், நியாயமாகவும் செல்வத்தை உருவாக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பர். இப்படிப்பில் சேர பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மூன்றாண்டு அனுபவம் அவசியம். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு டttணீ://தீதீதீ.ணடிஞூட்.ச்ஞி.டிண/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us