கால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா? எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா? | Kalvimalar - News

கால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா? எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா? ஜூன் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா? எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா?
கால் சென்டர்: மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்கள், வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ளும் திறன், அடிப்படை கம்ப்யூட்டர் திறன்கள் தொலை தூர வாடிக்கையாளர் மையங்கள்: மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்கள், வெளிநாட்டு ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ளும் திறன் டேட்டா சர்ச், இன்டகரேஷன் கணிதத் திறன்: மொழித்திறன் மற்றும் பகுத்தாராயும் திறன் மனித வள சேவை: எந்த நாட்டுக்கான கால் சென்டரோ அதன் மனித வள கொள்கைகளை அறிந்திருப்பது, அந்த நாட்டின் ஆதாரமான விதிகளை அறிந்திருப்பது 

தொலை தூர கல்வி: எந்த பாடத்திற்கான தொலை தூர ஆசிரியராக பணியில் அமர்த்தப்படுகிறீர்களோ அதில் மிகச் சிறந்த ஞானம் பெற்றிருப்பது, கணிதத் திறன், கம்ப்யூட்டர் திறன், மொழித் திறன் இன்ஜினியரிங் அண்ட் டிசைன்: டெக்னிகல் மற்றும் இன்ஜினியரிங் டிசைன், கணிதத் திறன் மற்றும் கம்ப்யூட்டர் திறன் மொழி மாற்றம், மெடிக்கல் டிரான்ஸ்கிருப்ஷன், லோகலை சேஷன்: மொழி அடிப்படைகளில் நல்ல திறன், கம்ப்யூட்டர் திறன், பல்வேறு மருத்துவ விஷயங்களை அறிந்திருப்பது 

அனிமேஷன்: வரையும் மற்றும் உருவாக்கும் திறன், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திறன் நிதி மற்றும் அக்கவுண்டிங் எந்த நாட்டோடு தொடர்புடைய பிபிஓ நிறுவனமோ அந்த நாட்டின் அடிப்படை அக்கவுண்டிங் முறைகளையும் விதிகளையும் அறிந்திருப்பது நெட்வொர்க் கன்சல்டன்சி மற்றும் மேலாண்மை: நெட்வொர்க் கான்பிகரேஷன்களை அறிந்திருப்பது, சப்போர்ட் எக்விப்மெண்ட் மற்றும் டெக்னிகல் திறன்களை அறிந்திருப்பது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us