பப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா? | Kalvimalar - News

பப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா? ஜூன் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அடிப்படையில் நாம் சிலரைப் பார்க்கும் போது அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேச கூடியவர்களாகவும் பழகக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இவர்களுக்கு எந்த பேதமும் இல்லாமல் அலுவலக அதிகாரி முதல் சாதாரண டீ பையன் வரை இப்படிப் பேச முடிகிறது.

இறுக்கமாக நிலவக்கூடிய ஒரு சூழலைக்கூட இவர்கள் மிக எளிதாக இனிமையானதாக மாற்றக்கூடிய திறன் பெற்றிருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கான துறை பப்ளிக் ரிலேஷன்ஸ் எனப்படும் வெளிதொடர்பு துறையாகும். இதற்கு தகுதிகளை விட இனிமையான குண நலன்களும் எதையும் கவர்ச்சிகரமாக சொல்லும் பாங்கும் தான் தேவை.

பலதரப்பட்ட மக்களை சந்திப்பதில் ஆர்வமுடையவராகவும், எளிதாகப் பழகும் தன்மை உடையவராகவும், எதைப் பற்றிய தகவலையும் எளிதாக அறிந்து கொள்ளும் ஆர்வமும் திறனும் உடையவராகவும் தலைமைப் பண்பு உடையவராகவும் இருந்தால் ஒருவருக்குப் பொருத்தமான துறை என்பது இது தான்.

இவற்றில் மிக முக்கியமானது அறிவைத் தேடும் அடிப்படை குணம் தான். இவற்றோடு நல்ல மொழித் திறன் பெற்றிருப்பதும் உங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக உங்களின் பணி இருக்கும் போது நிறுவனத்திற்காக நீங்கள் நடத்த வேண்டிய மாநாடுகள், கூட்டங்கள், நேர்முகத் தேர்வுகள், பிற சந்திப்புகள் இவற்றில் இந்த உங்களது குணங்களே உங்களுக்கும் உங்களது நிறுவனத்திற்கும் பெரிதும் உதவும்.

கால நேரம் பார்க்காது பணி புரிய வேண்டியவை பப்ளிக் ரிலேஷன்ஸ் பணிகள். பயணம் செய்வதற்கு அலுக்காத குணமும் தேவை. இவை எல்லவாற்றையும் விட அடிப்படையானது உங்களை நீங்கள் எந்த அளவு பளிச்சென்று வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் தான். 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us