பிரிட்டிஷ் பல்கலைகழகங்களில் இள நிலை பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகள் கால அளவைக் கொண்டவை. வெவ்வேறு படிப்புகளும் அங்கே உள்ளன. இன்ஜினியரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிசினஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகள் ஒகேஷனல் பிரிவு படிப்புகளாகத் தரப்படுகின்றன.
பிரிட்டனில் போய் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஒரு ஆண்டு அடிப்படை நிலைப் படிப்பு ஒன்றை முடிக்க வேண்டும். பிற நாட்டுப் படிப்புகளோடு ஒப்பிடுகையில் கால அளவு அங்கே குறைவு. டோபல் போல அங்கே போய் படிக்க விரும்புவோர் ஆங்கிலத் திறனறிய எழுதித் தகுதி பெற வேண்டிய தேர்வு ஐஈஎல்டிஎஸ் எனப்படும் International English Language Testing System என்பதாகும். பிரிட்டனில் சில பல்கலைகழகங்கள் டோபல் தகுதியை அங்கீகரிக்கின்றன.
பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் Universities and Colleges Admissions Services அமைப்பிற்கே விண்ணப்பிக்க வேண்டும். பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண் பெற்றிருப்போர் பர்ஸ்ட் டிகிரி கோர்ஸ் எனப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரலாம்.
பிற தகவல்களைப் பெற சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலை தொடர்பு கொள்ளலாம். அதன் முகவரி BRITISH COUNCIL DIVISION BRITISH DEPUTY HIGH COMMISSION 737 ANNA SALAI CHENNAI.