அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா? | Kalvimalar - News

அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா?மே 25,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., படித்து வருபவர்கள் பொதுவாக நமக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என முன் நம்பினால் அதற்குக் காரணம் இருந்தது. எம்.பி.ஏ., படிப்பானது மிகச் சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. அங்கே தரமான படிப்பும் தரப்பட்டது. இப்போது நிலையே வேறு. அதனால் எம்.பி.ஏ., படிப்பவரும் கூடுதல் திறன்களைத் தரும் படிப்புகளைப் படிப்பது அவசியமாகி விட்டது. இந்த அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்துள்ள ஏ.சி.எஸ்., படிப்பானது சரியான தேர்வுதான்.

பிளஸ் 2 முடித்திருந்தாலே நீங்கள் அடிப்படை கோர்சில் சேர்ந்து ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., படிப்புகளைப் படிக்கலாம். நீங்கள் நேரடியாகவே இன்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவற்றில் வெற்றி பெற்ற பின் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெறுவதும் அவசியம். இந்தத் தேர்வுகள் சென்னை, புதுச்சேரி, மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் நடத்தப்படுகிறது. மேலும் விபரங்களைப் பெறும்

முகவரி:
SOUTHERN INDIA REGIONAL COUNCIL
INSTITUTE OF COMPANY
SECRETARIES OF INDIA
NO.9 (OLD NO.4)WHEAT CROFTS ROAD
NUNGAMBAKKAM, CHENNAI 600 034.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us