சுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம்? வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்? | Kalvimalar - News

சுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம்? வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்?மே 25,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பெரிய பெரிய சுற்றுலா ஏஜன்சிகள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றில் தான் இந்தத் துறையின் பணி வாய்ப்புகள் உருவாகின்றன. சுற்றுலாத் துறையில் முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவருக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. என்றாலும், இந்தத் துறை பணி வாய்ப்புகளுக்கான அடிப்படை தேவைகளாக நல்ல தகவல் தொடர்புத் திறன் தான் உள்ளது.

ஆங்கிலத்தில் சிறப்பாக பேச முடிந்தவரே இந்தத் துறையில் மிகவும் பிரகாசிக்க முடியும். மேலும், இந்திய வரலாறு, கலாசார சிறப்புகள், தொன்மையான பாரம்பரியம் போன்றவற்றில் நல்ல அறிமுகமும் ஞானமும் இருக்க வேண்டும் என்றே இந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. வெறும் வரலாறு, புவியியல் போன்ற அடிப்படை தகவல்களுடன் எதிர்கால இந்தியா பற்றிய தெளிவான கருத்து பெற்றிருப்பதும் முக்கியமாக தேவைப்படுகிறது.

நமது போக்குவரத்து வசதிகள், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை நிறுவனங்களோடு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதும் கூடுதல் திறன்களாக கருதப்படுகின்றன. இந்த போக்குவரத்துத் துறை நிறுவனங்களின் கால அட்டவணை, முன்பதிவு செய்யும் வசதிகள் போன்றவற்றையும் பெற்றிருப்பது சிறப்பான பலன் தரும். ஓட்டல் மேனேஜ்மென்ட், சுற்றுலா நிர்வாகம், நல்ல உபசரிப்புத் திறன் போன்றவற்றைப் பெற்றிருப்பதும் சிறப்பான தகுதிகளாக அமையும்.

எனவே இந்தத் துறையில் நமக்கு முறையான கல்வித் தகுதிகள் இல்லையே என்று கவலைப் படாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பெற்றிட முயலுங்கள். இவை எல்லாவற்றையும் விட இந்திய மொழிகளில் தாய்மொழி தவிர கூடுதலாக சிலவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் பேசுவதற்கும் பின் எழுதுவதற்கும் கற்றுக் கொள்வது மிகவும் உதவும். குறிப்பாக இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்றவற்றை அறிவது உதவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us