பயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன?
ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.மே 12,2010,00:00 IST
நீங்கள் இத் துறையில் பட்டப்படிப்பு மட்டும் முடித்தால் அதற்கேற்ற துவக்கநிலை வாய்ப்புகளைப் பெறலாம். ஆனால் பயோகெமிஸ்ட்ரியைப் பொறுத்தவரை பட்ட மேற்படிப்பே பொதுவாக அறிவுறுத் தப்படுகிறது. இந்துஸ்தான் லீவர், யுனிகெம், பெரிய நிறுவனங்களின் ஆய்வகங்கள் என இத் துறைப் படிப்பை முடிப்பவருக்கு பல நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக கெமோஇன்பர்மேடிக்ஸ் என்னும் படிப்பும் நடத்தப்படுகிறது. மிகச் சிறந்த வாய்ப்புகளைத் தரும் படிப்பு இது.